கொரியா ஹாக்கி தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய பெண்கள் அணி

தென்கொரியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை இந்திய வீராங்கனைகள் வெற்றியோடு தொடங்கியுள்ளனர். #INDWvKORW
கொரியா ஹாக்கி தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய பெண்கள் அணி
Published on

ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடுவதற்காக இந்திய பெண்கள் ஹாக்கி அணி தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இன்று முதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்று, தொடரை வெற்றியோடு துவக்கியுள்ளது. இந்த போட்டி இந்திய அணி கேப்டன் ராணி ராம்பாலுக்கு 200-வது போட்டியாகும். 200-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், ராணி ராம்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே லால்ரேம்சியாமி கோல் அடித்தார். அதன்பின் இருநாட்டு வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. இந்திய கோல் கீப்பர் சவிதா புனிதா சிறப்பாக விளையாடினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com