இண்டியன் வெல்ஸ்- வீனஸ் வில்லியம்ஸிடம் வீழ்ந்தார் செரீனா

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார் செரீனா. #Indianwells #BNPParibasOpen
இண்டியன் வெல்ஸ்- வீனஸ் வில்லியம்ஸிடம் வீழ்ந்தார் செரீனா
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் (பின்பி பரிபாஸ் ஓபன்) நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் செரீனா 3-6, 4-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

1998-ம் ஆண்டு வீனஸ் வில்லியம்ஸ் தனது 17 வயதில். 16 வயதான செரீனாவை ஆஸ்திரேலியா ஓபன் 2-வது சுற்றில் தோற்கடித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் இருவரும் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இருவரும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் வீனஸ் 13 முறையும், செரீனா 17 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

வீனஸ் வில்லியம்ஸ்க்கு எதிராக செரீனா 41 அன்போர்ஸ்டு தவறுகள் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com