

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முதல்நிலை வீராங்கனை சிமோன ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்து 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால்இறுதியில் 44-வது இடத்தில் இருக்கும் நோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக் குடியரசு) அதிர்ச்சி அளித்தார். அரைஇறுதியில் சிமோனா ஹாலெப்-நோமி ஒசாகா மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத பெடரர் தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். கால்இறுதியில் பெடரர், தென்கொரியாவின் சுங் ஹயோனை எதிர்கொள்கிறார்.