

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் (பிஎன்பி பரிபாஸ் ஓபன்) நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஆறாவது இடத்தில் இருக்கும் அர்ஜெண்டினாவின் ஜூவான் டெல் போட்ரோவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை டெல் போட்ரோ 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-6 (10-8) என பெடரர் போராடி கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் 7-6 (7-2) என மூன்றாவது செட்டை கைப்பற்றிய டெல் போட்ரோ, 6-4, 6-7 (8-10), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.