அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்காவில் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #IndianOriginManJailed
அமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே(41). இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த இவர், ஆன்லைன் ஆப் ஒன்றின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்லாண்டோவைச் சேர்ந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியுடன் உரையாடும்போது, தான் ஒரு மாடலிங் ஏஜென்ட் என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியிடம் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியுள்ளார். அந்த சிறுமியும் அனுப்பியுள்ளார். இதேப்போல் சில மாதங்கள் தொடரவே, தீபக் மீண்டும் அந்த சிறுமியிடம் வேறு இரு நபர்கள் போல பேசி புகைப்படங்கள் கேட்டுள்ளார்.

இதனையடுத்து 2017ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் , தேஷ்பாண்டே அந்த சிறுமியை நேரில் காண ஆர்லாண்டோவுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் ஆர்லாண்டோ பகுதிக்கு வரும்போதும் அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இது தொடர்ந்துள்ளது. இதுபற்றி கிடைத்த தகசிய தகவலின் அடிப்படையில், எஃப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுமியைப் போல பேசி,  தீபக்கினை ஆர்லாண்டோவிற்கு வரவழைத்தனர். ஆர்லாண்டோ விமான நிலையத்தை வந்தடைந்த தீபக்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவன் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது தீபக் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பின்னர் இவ்வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தீபக் தேஷ்பாண்டேவிற்கு ஆயுள் தண்டனை விதித்தனர். #IndianOriginManJailed

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com