அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதியர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தம்பதியரை அவர்களது மகளின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரேன் பிரபு தம்பதி
நரேன் பிரபு தம்பதி
Published on

மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு உட்பட்ட லாரா வேல்லே லேன் பகுதியில் வசித்து வந்தவர், நரேன் பிரபு. கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் உலகப் பிரசித்தி பெற்ற சிலிக்கான் வேல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தங்களது வீட்டுக்குள் புகுந்த ஒருவன் தனது தந்தையையும் தாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தனது தம்பியை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாக நரேன் பிரபுவின் மூத்த மகன் சான் ஜோஸ் நகர போலீசாருக்கு அவசர தகவல் அளித்தான்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப் படை போலீசார் அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்வதற்காக முற்றுகையிட்டனர். போலீசாரை கண்ட கொலையாளி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த 13 வயது சிறுவனை விடுவித்தான்.

வீட்டைவிட்டு பத்திரமாக வெளியேவந்த சிறுவனை மீட்ட போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, நரேன் பிரபு, அவரது மனைவி மற்றும் கொலையாளி மூன்று பேரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

கொலையாளியுடன் நரேன் பிரபுவின் மகள்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com