பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க உயர் தூதருக்கு அனுமதி மறுப்பு - இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்கச் சென்ற உயர் தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib
பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க உயர் தூதருக்கு அனுமதி மறுப்பு - இந்தியா கண்டனம்
Published on

இஸ்லாமாபாத்:

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலி லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் வாழும் சீக்கிய மதத்தினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அதற்காக 300 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசாவும், சிறப்பு ரயில் சேவையும் பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி அஜய் பிசாரியா, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சீக்கிய யாத்ரீகர்களை காண குருத்வாரா சென்றுள்ளார். அங்கு செல்வதற்காக அவர் ஏற்கனவே அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால், சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை உயர் தூதருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #Pakistan #GurdwaraPanjaSahib

X

Maalai Malar
www.maalaimalar.com