விமானத்தில் தூங்கும் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இந்திய டாக்டர் கைது

விமான பயணத்தின்போது தூங்கிக் கொண்டிருந்த 16 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த வழக்கில் இந்தியாவை சேர்ந்த டாக்டரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
விமானத்தில் தூங்கும் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இந்திய டாக்டர் கைது
Published on

இந்தியாவை சேர்ந்த டாக்டர் விஜயகுமார் கிருஷ்ணப்பா(28) என்பவர் அமெரிக்க மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ஒருமாதகால சிறப்பு பயிற்சிக்காக அங்கு சென்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி அமெரிக்காவின் சியாட்டெல்  நகரில் நியூ ஜெர்சி செல்லும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இவர் பயணம் செய்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பக்கத்து இருக்கையில் ஒரு அழகிய இளம்பெண் தூங்கிக் கொண்டிருப்பதை கண்ட விஜயகுமார் மனதுக்குள் சிட்டுக்குருவிகள் சிறகடித்துப் பறந்தன. தனியாக பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணின் தொடையில்  மெதுவாக  கைவைத்து தடவினார்.

இதனால், உறக்கத்தில் இருந்து விடுபட்ட அந்த 16 வயதுப் பெண் அவரது கைகளை தட்டிவிட்டு மீண்டும் உறங்கினார். அப்போது, அவரை கட்டியணைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் அவர் புகார் அளித்தார்.

கோப்பு படம்

இடையில் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும் வாஷிங்டன் நகரில் இருக்கும் தனது பெற்றோருக்கு அந்தப் பெண் கைபேசி மூலம் இந்த தகவலை கூறினார். அதற்குள் விஜயகுமார் கிருஷ்ணப்பா விமான நிலையத்தில் இருந்து சென்று விட்டார்.

விமானத்தில் தனியாக வந்த இளம்பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்காமல் இருந்ததற்காகவும், பாலியல் தொல்லை தொடர்பான புகார் அளித்தும் உரியவர்மீது நடவடிக்கை எடுக்க தவறியதற்காகவும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவன நிர்வாகத்திடம் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் பொறுப்பு அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவத்தன்று அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியல் மற்றும் நியூஆர்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் தன்னிடம் அத்துமீறிய விஜயகுமார் கிருஷ்ணப்பாவை பாதிக்கப்பட்ட இளம்பெண் அடையாளம் காட்டினார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மைனர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக வரம்பு மீறியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com