துரோணச்சாரியா விருதுக்கு ராகுல்டிராவிட் பெயரை பரிந்துரைக்கவில்லை- இந்திய கிரிக்கெட் வாரியம்

மத்திய அரசின் துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை பரிந்துரைத்து உள்ளதாக வெளியானதை தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.#BCCI #RahulDravid #DronacharyaAward
துரோணச்சாரியா விருதுக்கு ராகுல்டிராவிட் பெயரை பரிந்துரைக்கவில்லை- இந்திய கிரிக்கெட் வாரியம்
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். தற்போது அவர் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.

அவரது பயிற்சியின் கீழ் 19 வயதுக்குட்பட்டோருக்கான 2017-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இதையடுத்து ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது என்பதில் உண்மையில்லை” என்றார்.#BCCI #RahulDravid #DronacharyaAward

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com