ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். #IndianArmyChief #BipinRawat
ராணுவ தளபதி இன்று அமெரிக்கா பயணம்
Published on

புதுடெல்லி:

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இதற்காக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வெஸ்ட் பாயிண்ட் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ அகாடமிக்கு பிபின் ராவத் செல்கிறார். கான்சாஸ் மாகாணம் போர்ட் லீவன்வொர்த் நகரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியையும் பார்வையிடுகிறார்.  #BipinRawat

X

Maalai Malar
www.maalaimalar.com