கத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்

கத்வா மற்றும் உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன் கோஷங்களை எழுப்பி இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kathua #Unnao #Protest #IndianAmericans
கத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்
Published on

வாஷிங்டன்:

ஜம்மு காஷ்மீரின் கத்வா நகரில் 6 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.  இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் பலாத்காரம் செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார்.  இதில் தொடர்புடைய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன் உள்ள காந்தி சிலை முன் இந்திய அமெரிக்கர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பாலியல் வன்முறை மற்றும் சிறுமி கொடூர கொலையை கண்டித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்திய அமைப்புகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. #Kathua #Unnao #Protest #IndianAmericans #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com