வினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

அமெரிக்காவில் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வென்ற இந்திய மாணவருக்கு ரூ.66 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
வினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்
Published on

அமெரிக்காவில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஐவி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான வினாடி-வினா போட்டி நடந்தது. அதில் துருவ் கவுர் மற்றும் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் துருவ் கவுர் வெற்றி பெற்றார்.


அவருக்கு ரூ.66 லட்சம் (1 லட்சம் டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகையை எப்படி செலவழிப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை என துருவ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com