மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி

5-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி
Published on

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஜமைக்காவில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் சார்பில் கைல் ஹோப்  46 (50) ரன்களும், ஷாய் ஹோப் 51 (98) ரன்களும் எடுத்தனர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 111 (115) ரன்களை குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 (52) ரன்களும், ரகானே 39 (51) ரன்களும் எடுத்தனர்.

மேற்கு இந்திய தீவுகள் சார்பில் ஜோசப், பிஸீ தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com