2.03 மீட்டர் உயரம் ‘டவர்’ பவுலர் இந்தியாவுக்கு எதிராக நாளை அறிமுகம் ஆகிறார்

ஆறு அடி எட்டு அங்குலம் உயரம் கொண்ட நியூசிலாந்தின் மிகவும் உயரமான வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு எதிராக நாளைய போட்டியில் அறிமுகம் ஆகிறார்.
கைல் ஜேமிசன்
கைல் ஜேமிசன்
Published on

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன். இவர் ஆறு அடி எட்டு அங்குலம் (2.03) உயரம் கொண்டவர். கிரிக்கெட்டில் விளையாடுவதில் இவர்தான் உயரமான நபர். இதனால் இவரை ‘டவர்’ பந்து வீச்சாளர் என்று அழைக்கின்றனர்.

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (0-60, 2-69, 4-49) சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைத்தது.

ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இவர் களம் இறங்கவில்லை. நியூசிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த இஷ் சோதி இன்று தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’- இந்தியா ‘ஏ’ இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாட விடுவிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com