U19 கிரிக்கெட்- 282 ரன்கள் குவித்து காம்பீர், புஜாராவை பின்னுக்கு தள்ளினார் பவன் ஷா

இலங்கைக்கு எதிரான போட்டியில் 282 ரன்கள் குவித்ததன் மூலம் காம்பீர், புஜாராவை பின்னுக்குத் தள்ளினார் பவன் ஷா. #INDU19 #pavanshah
U19 கிரிக்கெட்- 282 ரன்கள் குவித்து காம்பீர், புஜாராவை பின்னுக்கு தள்ளினார் பவன் ஷா
Published on

அதர்வா (177), பவன் ஷா ஆகியோரின் அபார சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பவன் ஷா 177 ரன்னுடனும், வதேரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பவன் ஷா இரட்டை சதம் அடித்ததன் உடன் 282 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்தது.

282 ரன்கள் குவித்த பவன் ஷா, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டேன்மே ஸ்ரீவாஸ்தவா பாகிஸ்தானுக்கு எதிராக 220 ரன்களும், கவுதம் காம்பீர் இங்கிலாந்திற்கு எதிராக 212 ரன்களும், புஜாரா இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்களும், அபிநவ் முகுந்த் இலங்கைக்கு எதிராக 205 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com