தென்ஆப்பிரிக்கா தொடர்: பயிற்சி ஆட்டம் ரத்து- நேரடியாக டெஸ்டிற்கு செல்கிறது இந்தியா

இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா அணி ஜனவரி 5-ந்தேதி நேரடியாக தென்ஆப்பிரிக்காவை முதல் டெஸ்டில் சந்திக்கிறது.
தென்ஆப்பிரிக்கா தொடர்: பயிற்சி ஆட்டம் ரத்து- நேரடியாக டெஸ்டிற்கு செல்கிறது இந்தியா
Published on

ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில் டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்தியா 27-ந்தேதி நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்படுகிறது. போட்டிக்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளதால் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா எந்தவித பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக கேப்டவுன் டெஸ்டிற்கு செல்கிறது.

இதுதொடர்பாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘எரோலக்ஸ் போலந்து பார்க்கில் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று அறிவித்திருந்தோம். தற்போது அந்த இடத்தில் பயிற்சி ஆட்டம் நடைபெறாது. அதற்குப் பதிலாக இந்தியா இரண்டு நாட்களாக பயிற்சியில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com