உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காள தேசத்துடன் இந்தியா மோதுகிறது

உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. #WorldCup2019 #CWC19
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, வங்காள தேசத்துடன் இந்தியா மோதுகிறது
Published on: 

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

இத்தொடருக்கு முன் ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோத இருக்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா மே 25-ந்தேதி நியூசிலாந்துடனும், மே 28-ந்தேதி வங்காள தேசத்துடன் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து பாகிஸ்தான், இலங்கையுடனும், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துடனும், வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்துடனும், தென்ஆப்பிரிக்கா இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உடனும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com