ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு 10வது தங்கம்- டிரிபிள் ஜம்ப் போட்டியில் அர்பிந்தர் சிங் சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. #AsianGames2018 #ArpinderSingh
ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு 10வது தங்கம்- டிரிபிள் ஜம்ப் போட்டியில் அர்பிந்தர் சிங் சாதனை
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 10-வது தங்கம் ஆகும். உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பனோவ் (16.62மீ) வெள்ளியும், சீன வீரர் சாவ் ஷுவோ (16.56 மீ) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர்  ராகேஷ் பாபு (16.40 மீ) ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டியின் முடிவில் இந்தியா மொத்தம் 10 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #ArpinderSingh

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com