3வது டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
3வது டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்
Published on

சென்னை:

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மையரும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் 6 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை எடுத்தது.

இந்த அதிரடி ஜோடியை சுழல்பந்து வீச்சாளர் சாஹல் பிரித்தார். முதலில் ஷாய் ஹோப்பை 24 ரன்னிலும், ஹெட்மையரை 26 ரன்னிலும் அவுட்டாக்கினார். இதையடுத்து அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.

அடுத்து இறங்கிய டேவன் பிராவோ பொறுப்புடன் ஆடினார். ராம்தின் 15 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.

அடுத்து ஆடிய நிகோலஸ் பூரன் பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடினர். அதன்பின்னர் அதிரடியை தொடர்ந்தனர். நிகோலஸ் பூரன் 4 சிக்சர்கள் அடித்து ஆட்டத்தின் அவரது அணியின் ரன்கள் உயர வழிவகுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. டேரன் பிராவோ 43 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் 25 பந்தில் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இந்தியா சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #INDvWI

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com