ஹாக்கி உலக லீக் அரையிறுதி: கனடாவிடம் 2-3 என வீழ்ந்து இந்தியா 6-வது இடம்

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் கனடாவிடம் 2-3 என வீழ்ந்து இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது.
ஹாக்கி உலக லீக் அரையிறுதி: கனடாவிடம் 2-3 என வீழ்ந்து இந்தியா 6-வது இடம்
Published on

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து 5 முதல் 8-வது வரையிலான இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

இன்று 5-வது அல்லது 6-வது இடத்திற்கான போட்டியில் இந்தியா, கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து 6-வது இடத்தை பிடித்தது. கனடா வீரர் கோர்டன் ஜான்ஸ்டன் 3-வது மற்றும் 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். கீஜான் பெரைரா 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 7-வது நிமிடத்திலும், 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இந்திய அணி காலிறுதியில் தன்னை விட தரவரிசையில் பின்தங்கிய மலேசியாவிடம் தோல்வியடைந்தது. தற்போது கனடாவிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கனடா அணி அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com