நாட்டின் முதல் புல்லட் ரெயில்: மோடி - ஷின்ஸோ அபே அடிக்கல் நாட்டினர்

மும்பை - அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகிய இருவரும் நாட்டினர்.
நாட்டின் முதல் புல்லட் ரெயில்: மோடி - ஷின்ஸோ அபே அடிக்கல் நாட்டினர்
Published on

அகமதாபாத்:

இந்தியா - ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டம் மற்றும் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகள் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்க்கு வருகை தந்தனர்.

விமான நிலையத்தில் ஷின்ஸோவை வரவேற்ற பிரதமர் மோடி, அவருடன் அகமதாபாத் நகரில் ஒரே வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். இதனையடுத்து, ஷின்ஸோ அபே அவரது மனைவி ஆகியோர் சமர்பதி ஆசிரமத்தை சுற்றிப்பார்த்தனர்.

இந்நிலையில், மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்சியில், மோடி மற்றும் அபே இருவரும் இணைந்து திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், மராட்டியம் மற்றும் குஜராத் மாநில முதல்வர்கள், மத்திய மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com