

மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த தொடரில் இந்தியா நான்கு தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 9 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
அமெரிக்கா 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடத்தையும், சீனா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், பிரான்ஸ் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணியின் ஷேயோரன் அகில், ஷஹ்சார் ரிஸ்வி, மனு பாகர் உள்பட நான்கு பேர் தங்கம் வென்றனர். #ISSFWorldCup