சத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

தமிழத்தில் நடைபெறும் சத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #indiacommunist #NutritionProjectScam
சத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
Published on

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் துறைகள் அனைத்தும் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக் கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது. இந்த மெகா ஊழல் பற்றி தமிழக அரசுக்கும், மத்திய விசாரணை முகமைக்கும் வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதால், இந்த சத்துணவு திட்ட மெகா ஊழல் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டாலும் அது ஏமாற்று வேலையாகவே முடியும்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழலை விசாரிப்பதுபோல் விசாரித்து, பின்பு அதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி தன் அரசியல் லாபத்துக்கு பணியவைக்கும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசு செய்து வருகின்றது. இந்த சத்துணவு மெகா ஊழல் விஷயத்திலாவது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #indiacommunist #NutritionProjectScam

X

Maalai Malar
www.maalaimalar.com