கும்பகோணம் நகராட்சியை கண்டித்து 13-ந்தேதி மறியல் போராட்டம்: இந்திய கம்யூ. கட்சி அறிவிப்பு

சுகாதாரத்தை பாதுகாக்க தவறும் கும்பகோணம் நகராட்சி மற்றும் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்தை கண்டித்து வருகிற 13 ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் நகராட்சி மற்றும் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்தை கண்டித்தும், காண்டிராக்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியும் வருகிற 13-ந் தேதி நகராட்சி அலுவலகம் எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், டாக்டர் மூர்த்தி சாலையில் செல்லம் நகர் மற்றும் காவேரி நகரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தனியார் காண்டிராக்ட் நிறுவனம் மூலம் தினசரி காலையில் இந்நகரில் உள்ள வீடுகளுக்கு வந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது.

அந்த பகுதி மக்களிட மிருந்து நகராட்சி வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் உள்ள குப்பை களை சேகரிக்க தனியார் நிறுவன காண்டிராக்ட் ஊழியர்கள் வரவில்லை. வீதிகள் எங்கும் குப்பைகள் நிறைந்துள்ளது. செல்லம் நகர் மற்றும் காவேரி நகரில் முறையான துப்புறவு பணிகள் இல்லாததால் நகர் முழுவதும் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் தனியார் நிறுவன காண்டி ராக்ட் ஊழியர்கள் நெருப்பு வைத்து எரிக்கும் அவலமும் உள்ளது.

நகராட்சிக்கு சொந்தமான பூங்காவிலும் சுகாதார பணிகள் நடைபெறுவதில்லை. இது குறித்து நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. நகரில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே செல்லம் நகர் மற்றும் காவேரி நகர் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை முறையாக அள்ளி பொது சுகாதாரத்தை பாதுகாக்க தவறும் கும்பகோணம் நகராட்சி மற்றும் தனியார் காண்டிராக்ட் நிறுவனத்தை கண்டித்தும், காண்டிராக்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி வருகிற 13-ந் தேதி கும்பகோணம் நகராட்சி அலுவலகம் எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com