

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.
ஹனுமா விஹாரி
அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.