இந்தியா ஏ அணியை 133 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் ஏ

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 133 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #INDA #WIA
இந்தியா ஏ அணியை 133 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் ஏ
Published on

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (0), மயாங்க் அகர்வால் (0), ஆர் சம்ர்த் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா ‘ஏ’ அணியால் மீள முடியவில்லை.

விஹாரி 37 ரன்களும், விஜய் ஷங்கர் 34 ரன்களும் சேர்க்க 42.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 133 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் ஹோல்டர் மற்றும் லெவிஸ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், ரெய்பெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com