வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிராக இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது. #INDA #WIA
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கெதிராக இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 192 ரன்களில் சுருண்டது
Published on

இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் உள்ள டவுன்டனில் தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கேம்ப்பெல், தாமஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 41 ரன்னிலும், தாமஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 90.5 ஓவரில் 302 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ப்ரூக்ஸ் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுக்களும், நதீம் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியில் கருண் நாயர், அங்கிட் பாவ்னே மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், கடைசி ஆட்டக்காரராக ஆடிய விஜய் சங்கர் 30 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில், இந்தியா ஏ அணி 48 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது. அங்கிட் பாவ்னே இறுதி வரை 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி சார்பில் ரேமன் ரீபர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய ஏ அணியை விட 206 ரன்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com