டோனியை கேப்டனில் இருந்து நீக்க நான் காரணமா?: இல்லவே இல்லை என்கிறார் பிளெமிங்

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டோனியை நீக்குவதற்கு என்னுடைய பங்கு இருப்பதாக எழுந்த செய்தியை ஸ்டீபன் பிளெமிங் மறுத்துள்ளார்.
டோனியை கேப்டனில் இருந்து நீக்க நான் காரணமா?: இல்லவே இல்லை என்கிறார் பிளெமிங்
Published on

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதனால் டோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு பயிற்சியாளர் பிளெமிங்கின் பங்கும் இருந்ததாக செய்தி உலா வந்தது. அந்த செய்தியில், “2016 ஐ.பி.எல். தொடரில் 7 போட்டிகளை மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். தோனியால் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இயலவில்லை, அதனால்தான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று பிளெமிங் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றியபோது

டோனியின் நெருக்கமாக இருந்த பிளெமிங்கே டோனியின் கேப்டன் பதவியை நீக்க காரணமாக இருந்துள்ளாரே என்று டோனியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் தான் கூறியதாக வெளிவந்த அந்த செய்தி ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று பிளெமிங் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com