

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த புலியை கண்டு இருவரும் அச்சத்தில் உறைந்தனர். எதிரே வந்த காரில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
பைக்கில் இருந்த இருவரும் அசையாமல் இருக்குமாறு அனைவரும் கூறினர். அதே போல் இருவரும் அசையாமல் இருந்தனர். இரண்டு புலிகள் அவர்களை சுற்றி வந்தன. ஆனால் புலி அவர்களை தாக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து சென்று விட்டன. இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.