பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பணம் சம்பாதிக்கும் பட்டதாரி வாலிபர்

இம்பாலைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் தனது தந்தையுடன் இணைந்து பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பணம் சம்பாதிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #recycleplasticwaste
பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் பணம் சம்பாதிக்கும் பட்டதாரி வாலிபர்
Published on

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த சடகோபன் இட்டாமி சிங் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் தொழில் ஒன்றை நடத்த விரும்பினார். இதனால் தனது தந்தையுடன் இணைந்து 2007-ம் ஆண்டு பிளாஸ்டிக் தொழிற்சாலையை தொடங்கினார். இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. 35 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் மூலம் வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் உபயோகிக்கலாம். ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் டெல்லி மற்றும் கவுகாத்தியில் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. ஆனால் 2010-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய கருவிகளினால் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசிய குனாகந்தா, 'பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. அவற்றை வெளியே வீசுவதன் மூலம் நீர் ஆதாரங்கள் மாசுபடுகின்றன. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்கலாம்' என கூறினார்.

நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் பாட்டில் கலாசாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. இன்று பிளாஸ்டிக் என்பது ஒட்டு மொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.

இந்நிலையில், இம்பாலைச் சேர்ந்த தந்தை-மகன் பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் ஆண்டிற்கு 1.5 கோடி ரூபாய் சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #recycleplasticwaste

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com