உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் - சிவசேனா

மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar
உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் - சிவசேனா
Published on

மும்பை:

மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் இன்றைய பதிப்புடன் வெளியாகியுள்ள இணைப்பு பகுதியில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:-

பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவைப் போல் வீர சவர்க்காரும் ‘பாரிஸ்ட்டர்’ பட்டம் பெற்றவர்தான். ஆனால், ஜின்னா தனது படிப்பை பாகிஸ்தான் பிரிவினைக்கு பயன்படுத்தி கொண்டார்.

வீர சவர்க்கார் தனது படிப்பை இந்த நாட்டுக்காக தியாகம் செய்தார். இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணாசிரம கொள்கையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை அவர் ஆதரித்தார். இந்துத்துவா கொள்கைகளை மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும், மதம்சார்ந்த மூடப்பழக்கங்களை கண்மூடித்தனமாக அவர் ஆதரித்தது கிடையாது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து முகமது அலி ஜின்னா புகைப்படத்தை நீக்கியதற்கு பதிலடி தரும் விதமாக சில அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வீர சவர்க்காரின் புகைப்படம் நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்துள்ளது. ஜின்னாவை ஆதரிப்பவர்கள் வீர சவர்க்காரை வெறுப்பதை வைத்தே அவர் இந்து மதத்தின் எவ்வளவு பெரிய அடையாளமாக கருதப்படுகிறார்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட வீர சவர்க்காருக்கு மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் பாரத ரத்னா பட்டம் தர வேண்டும். இல்லாவிட்டால், அரசியலுக்காக மட்டுமே நாங்கள் இந்துத்துவாவை பயன்படுத்துகிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com