

இந்திய அணியில் விளையாடிய ஸ்மிரி மந்தனா 9 போட்டிகளில் 531 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் அடங்கும். இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் 181 ரன்கள் அடித்தார். சராசரி 90.5. ஸ்டிரைக் 77.68 ஆகும். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல்-ரவுண்டரான தீப்தி ஷர்மா 104 ரன்களுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பந்து வீச்சு தரவரிசையில் 14-வது இடத்திற்கும், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.