டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு அஸ்வின் முன்னேற்றம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி 39வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு அஸ்வின் முன்னேற்றம்
Published on

துபாய்:

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இரண்டாமிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இரண்டாமிடத்தில் இருந்த இலங்கை அணியின் கேப்டன் ரங்கனா ஹெராத் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி 39வது இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் புஜாரா மற்றும் அணித் தலைவர் விராட் கோலி முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com