

லண்டன் :
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லண்டனில் இன்று நடைபெறும் 3-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன. ‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது.
பின்னங்கால் காயத்தால் அவதிப்படும் கேப்டன் மேத்யூஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தரங்கா கேப்டனாக களமிறங்குகிறார். மலிங்கா இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இன்று விளையாடுகிறார். காயத்தால் அவதிப்பட்டு இருந்த தென் ஆப்பிரிக்க அணியின் மில்லர் மற்றும் இம்ராம் தாஹிர் இருவரும் இன்று களமிறங்குகிறார்கள்.
மைதானத்தை பொறுத்தவரை இன்றைய போட்டியில் 280 ரன்கள் வரை எடுத்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தரங்கா முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ், டி வில்லியர்ஸ்(கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பர்னால், ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர்.
இலங்கை: நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா (கேப்டன்), குசால் மென்டிஸ், தினேஷ் சண்டிமால், குணரத்னே, குசால் பெரேரா, கபுகேதரா, திசரா பெரேரா, லக்மல், மலிங்கா, பிரதீப், பிரசன்னா.