

இதனையடுத்து இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்போது புவனேஷ் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் ஷமி சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது. இது குறித்து இந்திய அணியின் ஜாம்பவானாக திகழும் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
புவனேஷ் குமார் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் பயிற்சி மேற்கொள்ளும்போது பந்து வீசுவதை பார்த்தேன். அவர் மிகவும் நல்ல உடல்நிலையில் உள்ளார்.
குறிப்பாக கெயிலுக்கு கடும் நெருக்கடியை புவனேஷ் கொடுப்பார். நான் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலும் கெயிலுக்கு அதிக நெருக்கடியை புவனேஷ் கொடுத்தார்.
எனவே புவனேஷ் கட்டாயம் இந்த போட்டியில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஷமியை நீக்குவதும் கடினமான ஒன்றுதான். ஆனால், வேறு வழி இல்லை.