

மேலும் 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற தொடரில் 100 மீட்டரை 9.58 வினாடிகளிலும், 200 மீட்டரை 19.19 வினாடிகளிலும் கடந்து சாதனைப் படைத்தவர். இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை.
இந்த காலக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாரும் நெருங்க முடியாத நிலையில், தன்னுடைய சாதனையை முறியடிக்க இன்னும் 15 முதல் 20 வருடங்கள் வரை ஆகும் என உசைன் போல்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில் யோகன் பிளேக், ஜஸ்டின் காட்லின் மற்றும் அசஃபா பாவெல் ஆகியோர் தடகளத்தில் மிகச்சிறந்த ஜாம்பவான்கள். என்னுடைய சாதனைகள் உடைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றால், இந்த காலக்கட்டத்தில் உடைத்திருக்க வேண்டும்.