டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்: அமைச்சர் சீனிவாசன்

டெங்கு உயிரிழப்பு குறித்து டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்: அமைச்சர் சீனிவாசன்
Published on: 

பழனி:

பழனியில் பாலாறு பொருந்தலாறு அணை தண்ணீரை விவசாயத்திற்காக திறந்து விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து 834 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீரை விவசாயிகள் முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கூறி இருந்தேன். இதற்கு பல்வேறு தரப்பினர் டெங்குவால் உயிரிழப்பு நடந்துள்ளது என்று கூறினர்.

மாவட்ட நிர்வாகமும் நலப்பணிகள் இணை இயக்குனரும் தெரிவித்த கருத்தையே நான் கூறினேன். நான் டாக்டர் அல்ல. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை பரிசோதனை செய்து என்ன காய்ச்சல் என்று தெரிவிக்க முடியாது. எந்த காய்ச்சலால் உயிரிழந்தனர் என்பதை டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும். திண்டுக்கல மாவட்டத்தில் அவ்வாறு மருத்துவ குழுவினர் தெரிவித்த கருத்தையே நான் கூறினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X