தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தமிழக மாணவி ஹிரிதிகா தங்கம் வென்று அசத்தல்

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னை பள்ளி மாணவி ஹிரிதிகா தங்கம் வென்றார்.
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தமிழக மாணவி ஹிரிதிகா தங்கம் வென்று அசத்தல்
Published on

விஜயவாடா:

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் விஜயவாடாவில் நடந்தது. இந்த தொடரின் ஜூனியர் சிறுமிகள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஹிரிதிகா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த செயின்ட் பாட்ரிக் பள்ளியின் வர்திகா பாரத்தை எதிர்த்து விளையாடினார். இதில் அதிரடியாக விளையாடிய ஹிரிதிகா 11-5, 11-5, 11-6 என்ற நேர்செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்றார்.

ஜூனியர் சிறுவர் பிரிவு அரையிறுதி போட்டியில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி & ஜூனியர் காலேஜின் பாலமுருகன், கர்நாடகாவின் ஸ்ரீ குமரன் சில்ரன் ஹோம் பள்ளியின் சுஜன் பரத்வாஜுடன் மோதினார். இப்போட்டியில் 4-11, 9-11, 4-11 என்ற நேர் செட்களில் தமிழக வீரர் தோல்வி அடைந்தார். இந்த பிரிவின் இறுதிப்போட்டியில் பரத்வாஜ் தங்கம் வென்றார். அரையிறுதியில் தோல்வியடைந்த பாலமுருகனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

இந்த தொடரில் தமிழ்நாட்டிற்கு ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தது. கர்நாடகா மற்றும் மேற்குவங்காள அணியினர் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப்பதக்கங்கள் வென்று அசத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com