ஹாங்காங் பேட்மிண்டன்: பி.வி. சிந்து, பிரானாய் இரண்டாவது சுற்றிற்கு முன்னேற்றம்

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினர்.
ஹாங்காங் பேட்மிண்டன்: பி.வி. சிந்து, பிரானாய் இரண்டாவது சுற்றிற்கு முன்னேற்றம்
Published on

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முண்ணனி வீராங்கனை பி.வி. சிந்து  வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்.

இவர் முதல் சுற்றில்  ஹாங் காங்கின் வேனுஸ்யூட்டுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சிந்து 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அஸ்வினி போபண்ணா மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. சீனாவின்  குயாங் டோங்பிங் மற்றும் லி வேன்மெய் ஜோடியை எதிர்கொண்ட இந்திய ஜோடி 11-21,  21-19, 19-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஹை.எஸ். பிரனாய் ஹாங்காங்கின் யுன் கானிடம் மோதினார். அவர் 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com