

புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ரூ.44,524 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிளிக் கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் அறிமுகமம் செய்யப்பட்டது.
இந்திய நடைமுறைக்கு ஏற்ற மாடலாக இருக்கும் கிளிக் ஊரக பகுதிகளில் ஸ்கூட்டர் பயன்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும். தமிழகத்தில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹோன்டா இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் 28 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது.
புதிய ஹோன்டா கிளிக் 110 சிசி ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா சார்ந்து உருவாகியுள்ளது. புதிய கிளிக் ஆண் மற்றும் பெண் என இருபாலினத்தவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட் உயரம் 743 மில்லிமீட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா கிளிக் 110 சிசி மாடலில் BS IV HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 8.94 Nm பீக் டார்கியூவில் அதிகபட்சம் 7.9 bhp செயல்திறன் கொண்டுள்ளது. 102 கிலோ எடை கொண்டுள்ள ஹோன்டா கிளிக் சீரற்ற சாலைகளிலும் எளிமையாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் கிடைக்கும் கிளிக்குடன் பல்வேறு கூடுதல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது.
இத்துடன் ரக்டு பிளாக்-பேட்டன் டையர்களை கொண்டுள்ள முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹோன்டா கிளிக் பெற்றுள்ளது. இவ்வகை டையர் அதிக க்ரிப் மற்றும் நீண்ட நாள் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. தமிழகத்தில் கிளிக் மொத்தம் நான்கு நிறங்கள் - பேட்ரியாடிக் ரெட் சார்ந்த வைட், மொரோகேன் புளூ சார்ந்த வைட், ஆர்கஸ் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.