ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல் இயக்கம்

ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல் இயக்கம்
Published on

ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மாமரத்துக்கடவு பகுதியில் இருந்து சினிபால்ஸ் வரை பரிசலில் சென்று ஒகேனக்கல்லில் பெரியபாணியில் (ஐந்தருவியில்) தண்ணீர் விழும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

நீண்ட நாட்களுக்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீன் விற்பனை சூடு பிடித்தது. மசாஜ் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com