உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.
உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி
Published on

லண்டன்:

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா-கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் சுனில் 5-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப்சிங் 10-வது நிமிடத்திலும், சர்தார்சிங் 18-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை வென்று இருந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com