ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர்: பாகிஸ்தானை 6-1 என வீழ்த்தியது இந்தியா

ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் 5 முதல் 8-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை 6-1 என இந்தியா வீழ்த்தியுள்ளது.
ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர்: பாகிஸ்தானை 6-1 என வீழ்த்தியது இந்தியா
Published on

லண்டனில் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்ற இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பின்னர் காலிறுதியில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இன்று நடைபெற்ற 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்படி சிறப்பாக விளையாடியதோ, அதேபோல் இன்னும் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய வீர்ர்களின் அபார ஆட்டத்திற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை

இதனால் இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com