

தற்போது 2019-ம் ஆண்டு விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹாக்கி இந்தியா மான்ப்ரீத் சிங், தரம்விர் சிங் மற்றும் வீராங்கனை சவிதா புனியா பெயர்களை அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது.
மான்ப்ரீத் சிங் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின்போது இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். தரம்விர் சிங் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த மிட்-பீல்டர் ஆவார். சவிதா புனியா இந்திய பெண்கள் அணியின் தலைசிறந்த கோல் கீப்பராவார்.