

எச்எம்டி குளோபல் நிறுவனம் அக்டோபர் 31-ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் வெளியிடுவதற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அழைப்பிதழில் புதிய நோக்கியா போன்களின் வெளியீட்டு நிகழ்வு என குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நோக்கியா போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7 மற்றும் நோக்கியா 2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. நோக்கியா 2 பட்ஜெட் ஸ்மார்ட்போன் 99 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,435 விலையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் நோக்கியா நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும். முன்னதாக நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் ஃபிளாக்ஷிப் நோக்கியா 8 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை முறையே ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் விற்பனைக்கு வந்தது.
சீனாவில் வெளியிடப்பட்ட நோக்கியா 7 ஸ்மார்ட்போனில் போத்தி எனும் கேமரா அம்சம் வழங்கப்பட்டது, இந்த அம்சம் ஒரே சமயத்தில் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா மூலம் படமாக்கும் வசதி கொண்டுள்ளது. இதன் பில்ட்-இன் கேமரா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் லைவ்-ஸ்டிரீமிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
நோக்கியா 7 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் IPS 2.5D, 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- பின்புறம் கைரேகை ஸ்கேனர்