இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமகோபாலன்
ராமகோபாலன்
Published on

பூந்தமல்லி:

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்(வயது 95). அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமகோபாலனுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com