20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை

இந்தியாவின் தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தங்கம் வென்று அசத்தினார். #Himadas
ஹீமா தாஸ்
ஹீமா தாஸ்
Published on

செக்குடியரசு நாட்டில் நோவ் மேஸ்டோ நாட் மெடுஜி கிராண்ட் பிரிக்ஸ் தடகளம் நடைபெற்றது. இதில் நேற்ற நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்தியாவின் ஹீமா தாஸ் கலந்து கொண்டார். அவர் 52.09 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

கடந்த 2-ந்தேதி போலந்தில் நடைபெற்ற தடகளத்தில் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின் தற்போது ஐந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றாலும், உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கு தகுதி பெற நிர்ணயித்த 51.80 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com