டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்- மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்

பாகிஸ்தானுக்கு எதிரான அபு தாபி டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன். #PAKvAUS
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்- மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்
Published on

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 282 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 80 ஆட்டங்களில் 314 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

மிட்செல் ஜான்சன் 73 போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார். நாதன் லயன் 314 விக்கெட்டுக்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஷேன் வார்னே 145 போட்டியில் 708 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், மெக்ராத் 124 போட்டியில் 563 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், லில்லீ 355 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com