தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் எந்த திட்டத்தைத்தான் நிறைவேற்றுவது? என டிடிவி தினகரனுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
Published on

சென்னை:

கடலுர் மாவட்டம் புவனகிரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரி அ.ம.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால், எந்த திட்டத்தைத்தான் தமிழகத்தில் நிறைவேற்றுவது?

நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்? ஹைட்ரோ கார்பனால் என்ன பாதிப்பு என ஆராய்ச்சி செய்து நாளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com