ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தியது டெல்லி டைனமோஸ் எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. அணியை 5-1 என வீழ்த்தியது. #HeroISL #MumbaiCityFC #DelhiDynamosFC
ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி எப்.சி. அணியை வீழ்த்தியது டெல்லி டைனமோஸ் எப்.சி.
Published on

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று டெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய 84-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

இப்போட்டி தொடங்கிய 5-வது நிமிடமே டெல்லி அணியின் நந்தகுமார் சேகர் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் டெல்லி அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் மும்பை அணியின் எவர்டன் சாண்டோஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டம் முழுவதும் டெல்லி அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். 74-வது நிமிடத்தில் டெல்லி அணியின் மத்தியஸ் மிராபஜே கோல் அடித்தார். பின்னர் 81-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட டெல்லி அணியின் மனுவல் அரனா கோல் அடித்தார்.

அதைத்தொடர்ந்து 85-வது நிமிடத்தில் டெல்லி அணியின் கலு உச்சேவும், 90-வது நிமிடத்தில் லாலியன்சுவாலா சாங்தேவும் கோல் அடித்தனர். மும்பை அணியினரால் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் டெல்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com